தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக  அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் இற்றப்பட்டுள்ளது. தடை மசோதா சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற அரசின் நடவடிக்கைக்கு தாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் என்பது காலத்தின் கட்டாயம். மேலும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை எந்த காலத்திலும் நீதிமன்றத்திலும் தடை செய்ய முடியாத அளவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.