சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் வங்கி பெயரில் குறுந்தகவல் வந்தது. அதில் வந்த லிங்கை கார்த்திகேயன் பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் மீண்டும் அந்த லிங்க்கை பதிவிறக்கம் செய்து பார்த்தார். அப்போதும் அவரது வங்கி கணக்கில் இருந்து மேலும் 5 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து கார்த்திகேயன் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.