சென்னை மாவட்டத்தில் வீட்டு மனைகள் மற்றும் நிலங்களுக்கான கிரைய பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்கு தமிழக அரசு சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பிப்ரவரி 24ஆம் தேதி ஆர்கேநகர், திரு.வி நகர், கிண்டி, மயிலாப்பூர், டி. நகர் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 25ஆம் தேதி மாதவரம், பெரம்பூர், திரு.வி.க நகர், வ.உ.சி நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றன. இதனை அடுத்து பிப்ரவரி 26 ஆம் தேதி மாதாவரம், எழும்பூர், அம்பத்தூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று முடிந்தது.

இன்று பிப்ரவரி 27ஆம் தேதி மாதவரம், ஆர்.கே நகர், அண்ணாநகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது நாளையும் மாதாவரம், பெரம்பூர், அண்ணா நகர், மயிலாப்பூர், டி. நகர், சைதை ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் வீடு மனைகளுக்கான கிரைய பத்திரம் மற்றும் பட்டாவை பெற்றுக்கொள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.