
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்நாட்டிற்குள் செல்லும் விமானத்தின் கட்டணம் 20 முதல் 205 சதவீதம் வரை குறிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த சலுகை 30 நாட்களுக்கு முன்பு, முன்பதிவு செய்த விமான பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று விமான நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதோடு விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது ஆகியவையே இந்த கட்டண குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.