செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே. பி முனுசாமி, கடந்த 25 ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை கழக அலுவலகத்தில் கழகத்தினுடைய போற்றுதலுக்குரிய பொதுச் செயலாளர் அவருடைய தலைமையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் ஏற்கனவே எங்களோடு கூட்டணியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை,  எங்கள் இயக்கத்தைப் பற்றியும் –  எங்களுடைய இயக்கத்தினுடைய தலைவர்களை பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் செய்த காரணத்தினால்,  இதற்கு முன்பாகவே இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து,  ஒரு கண்டன தீர்மானமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போடப்பட்டது.

அதைத்தொடர்ந்தும் தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைமை பேரறிஞர் அண்ணா பெருந்தகை பற்றியும்,  எங்களுடைய கழகத்தினுடைய போற்றுதலுக்குரிய பொதுச் செயலாளர் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை செய்தார்கள். அப்படி செய்கின்ற விமர்சனங்கள் அத்தனையும் உண்மைக்கு மாறான விமர்சனமாக இருந்ததால் தமிழகத்தில் இருக்கின்ற 2 கோடி தொண்டர்கள் கடுமையான கோபத்திற்கு ஆளானார்கள்.

அந்த கோபத்தின் வெளிப்பாட்டில் அங்கே இருக்கின்ற ஒன்றிய கழகச் செயலாளர்களிடத்திலும், மாவட்ட கழக செயலாளர்களிடத்திலும் பல்வேறு வகையிலேயே அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதை தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி மிக முக்கியமான ஆலோசனை கூட்டம்… மாவட்ட செயலாளர்கள்,  நாடாளுமன்ற –  சட்டமன்ற உறுப்பினர்கள்,  தலைமைக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய அந்த ஆலோசனை கூட்டத்தில்,

2 கோடி தொண்டர்களுடைய உணர்வுகளை…. அந்தக் கூட்டத்தில்,  மாவட்ட கழக செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர்களும் – நாடாளுமன்ற உறுப்பினர்களும் – தலைமைக் கழக நிர்வாகிகளும் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து,  விமர்சனம் செய்தார்கள். அப்படி விமர்சனம் செய்ததன் அடிப்படையில்,  ஒட்டுமொத்தமாக… அனைவரும்…  ஒன்றிணைந்து….  ஏக மனதாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து  வெளியேற வேண்டும். அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாம் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தார்கள் என தெரிவித்தார்.