
புதுச்சேரி பதிவெண் கொண்ட பேருந்து, சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தும் போது, மற்றொரு பேருந்தின் பாஸ்டேக் பயன்படுத்தியதாக சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து வந்து மேற்கொண்ட ஆய்வில், ஒரே பதிவெண் கொண்ட 4 பேருந்துகள் மாற்றி மாற்றி இயக்கப்பட்டு, அரசுக்கு வரி இழப்பை ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பேருந்தின் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டபோது, ஒரே ஆவணங்களை கொண்டு பல பேருந்துகள் இயங்கி உள்ளது. இது தனியார் பேருந்து துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேருந்தும், அதன் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது பொது மக்களிடையே கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. தனியார் பேருந்து நிறுவனங்கள் முறைப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, ஆம்னி பேருந்து துறையின் ஆவணங்களை துல்லியமாக பரிசோதிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.