
இந்திய வானிலை ஆய்வு மையம் நாட்டில் கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024 ஆம் ஆண்டில் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் கடந்த வருடம் வெப்பம் பகல் நேரங்களில் உச்சம் தொட்டது. கடந்த 1901ஆம் ஆண்டு முதல் வரைகான பதிவுகளின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டில் வெப்பம் அதிக அளவில் இருந்துள்ளது.
அதன்படி இயல்பை விட வெப்பநிலை 0.54 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகமாக இருந்தது. அதன்பிறகு சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 0.90 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக இருந்துள்ளது. மேலும் உலக அளவில் சராசரியாக இந்தியாவில் 41 நாட்கள் ஆபத்தான வெப்பநிலை காலத்தை அனுபவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.