
இந்தியாவில் ஏராளமான புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களில் மட்டும் புலிகள் பல இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த எண்ணிக்கை 628 ஆகும். இவை இயற்கை காரணங்கள் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் புலிகள் தாக்கி 349 பேர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மராட்டியத்தில் மட்டும் சுமார் 200 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புலிகளின் இறப்பு எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்திவரதன் சிங் கூறியதாவது, 2019 மற்றும் 20 ஆம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021 ஆம் ஆண்டு 59 பேரும், 2022 ஆம் ஆண்டில் 110 பேரும், 2023 ஆம் ஆண்டு 88 பேரும் புலிகள் தாக்கி இறந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் புலிகள் தாக்கி 59 பேரும், மத்திய பிரதேசத்தில் 29 பேரும் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள தரவுப்படி, 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3682 ஆக இருந்தது. இந்திய புலிகள் திட்டம் ஏப்ரல் 1 1973 ஆம் ஆண்டில் அறிமுகம்படுத்தப்பட்டது. இது ஆரம்பத்தில் 9 புலிகள் காப்பகமாக இருந்த நிலையில், தற்போது இந்தியாவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன.