சோமாலியாவிலிருந்து ஜிபூதிக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று ஏமனின் அடன் அருகே உள்ள ராஸ் அல்-அராஹ் கடற்கரையில் கவிழ்ந்தது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், கப்பல் கடலில் சாய்ந்து பின்னர் முழுமையாக கவிழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்தக் கப்பலில் இருந்த ஆடுகளின் எண்ணிக்கை பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளியானாலும், பெரும்பாலான உள்ளூர் ஊடகங்கள் சில ஆயிரம் ஆடுகள் இருந்ததாக உறுதி செய்துள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Delhilastnight (@delhilastnight)

சம்பவம் நடந்தவுடன், ராஸ் அல்-அராஹ் பகுதியைச் சேர்ந்த ஏமனின் மீனவர்கள் தங்கள் படகுகளை கொண்டு விரைந்து வந்து சில சோமாலிய கடற்படைக் குழுவினரையும், பல ஆடுகளையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த விரைவான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

எனினும், மீட்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும், 160-க்கும் மேற்பட்ட ஆடுகள் கடலில் மூழ்கி உயிரிழந்தன. வீடியோக்களில், ஏமன் கடலிலிருந்து மீதமுள்ள ஆடுகளை கயிறுகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி இழுத்து மீட்பதைக் காண முடிகிறது.

சில மணி நேரத்தில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது, இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதாகவும், மேலும் பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.