குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே வத்வா பகுதியில் புல்லட் ரயில் தட பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரெடிமேடு பாலத்தை மேலே உயர்த்தும் ராட்சத பளு தூக்கி சரிந்து கீழே உள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ராட்சத பளு தூக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் அந்த வழியாக இயக்கப்படும் 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.