
கேரளாவில் ஆற்றில் குளித்ததால் 5 வயதில் சிறுமி ஒருவர் அறியவைக நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கடந்த மே 1ம் தேதி கடலண்டி ஆற்றில் 5 குழந்தைகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட உறவினர்களோடு விடுமுறைக்கு சென்றுள்ளார்கள், அப்போது அங்கு அவர்கள் குளித்துள்ளனர் .பின்னர் அனைவரும் வீடு திரும்பிய நிலையில் கடந்த மே 10ஆம் தேதி சிறுமிக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அரியவகை நோயான அமீபிக் மெனிங்கோமென்சிபாலிட்டிஸ்’ அல்லது ‘நியக்லேரியா’ என்ற நோய் தாக்குதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத நீச்சல் குளம் மற்றும் கடுமையாக மாசடைந்த நீர் நிலைகளில் குளிக்கும் பொழுது ஒரு வகை அமீபா நுண்ணுயிரி உடலுக்குள் புகுந்து இந்த நோய் ஏற்படுகிறது. இந்த அமீபா கொஞ்சம் கொஞ்சமாக மூளையை அழித்துவிடும். இதனால் தலைவலி, வாந்தி, மயக்கம் தலை சுற்று போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் பிறகு தீவிரமாகி வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக நிலை ஏற்படும். இந்த நிலையில் இந்த ஐந்து வயது சிறுமி உயிருக்கு போராடிவரும் நிலையில் அவருக்கு பல விதமான மருத்துவ முறைகள் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநில அரசு மில்டிபோஸ்டின் என்ற மருந்தை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வந்து சிறுமிக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக அம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமி குளித்த கடலண்டி ஆற்றில் உள்ள பகுதியில் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்து தொடர்கான்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.