மெட்ரோ ரயில் திட்டப் பணியின் போது சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“நம்ம மெட்ரோ” என்னும் பெயரிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பெங்களூர் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அசோக் நகர் பகுதியில் சாலையில் இன்று வழக்கம் போல் பயணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவில் பெரிய அளவில் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிகாரிகள் அந்த பகுதியை சுற்றி வேலி அமைத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் வளையம் அமைத்துள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பெங்களூர் நகரின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்ற போது கல்யாண்நகரில் இருந்து எச்.ஆர்.பி பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்திற்காக தூண்கள் அமைக்கப்பட்டு வந்தது. இந்த தூண் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் திடீரென இடிந்து சாலையின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது விழுந்தது. இதில் கணவன் மனைவி மற்றும் இரண்டு வயது மகன் போன்றோர் காயமடைந்துள்ளனர்.
இருப்பினும் இந்த விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது மெட்ரோ ரயில் திட்டப் பணியின் போது சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது,” 40 சதவீத கமிஷன் அரசின் விளைவு இது. வளர்ச்சி பணிகளில் எந்தவித தரம் சார்ந்த விஷயமும் இல்லை என குற்றச்சாட்டாக” தெரிவித்துள்ளார்.