உத்திரபிரதேச மாநிலத்தில் ஹரிபேஜி (81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் 23-ஆம் தேதி மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்த நிலையில், 24-ஆம் தேதி மூதாட்டி மூளைச்சல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மூதாட்டியின் உடலை குடும்பத்தினர் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இறுதி சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் மூதாட்டியின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென மூதாட்டி உயிர்த்தெழுந்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்து அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் இறந்துவிட்டதாக கருதி ஒரு பெண்ணுக்கு அனைத்து விதமான இறுதிச் சடங்குகளும் நடைபெற்ற நிலையில் திடீரென அந்தப் பெண் மீண்டும் உயிருடன் எழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.