சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 19 வயது முதல் 42 வயதுக்கு உட்பட்ட 30 ஆண்களுக்கு விந்தணு சோதனை என்று அழைக்கப்படும் விந்து பகுப்பாய்வு முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆண்களின் விந்தணுவை சோதித்ததில், ஆண்களின் விந்தணு தரம் மிகவும் மோசமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 30 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேருக்கு 40 சதவீதம் அளவுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு 30 பேரில் 10 பேருக்கு விந்துணுவின் அளவு 1.5 மில்லிக்கு குறைவாக இருந்துள்ளது. பொதுவாக இந்த அளவானது 1.5 முதல் 5 மில்லி வரை இருக்க வேண்டும். இதேபோன்று விந்து திரவத்தின் தடிமன், உயிர் சக்தி மற்றும் மொத்த இயக்கம் போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் சதீஷ் திபாங்கர் தெரிவித்துள்ளார்.