ராணிப்பேட்டை நெடும்புலி கிராமத்தில் வசிப்பவர் கணபதி. 23 வயதான இவருக்கு  திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இவர் 17 வயது மாணவி ஒருவரோடு பழகி வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இந்த மாணவியை கணபதி காதலிப்பதாக கூறியிருக்கிறார்.  மேலும் என்னுடைய மனைவியை பிடிக்கவில்லை. உன்னை தான் பிடித்திருக்கிறது என்று கூறி ஆசையை காட்டியுள்ளார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி தனிமை சந்தித்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து கடந்த மூன்று மாதமாக வயிறு வலி, தலைவலி மாணவிக்கு இருந்ததால் அவரை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளாரகள். அப்பொழுது பரிசோதித்த மருத்துவர் மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கணபதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.