உலகநாயகன் கமல்ஹாசனின் வாரிசான சுருதிஹாசன் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீலின் சலார்  படத்தில் பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள வால்டர் வீரய்யா மற்றும் நடிகர் பால கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி ஆகிய 2 திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் பாலகிருஷ்ணாவின் பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், நடிகர் சிரஞ்சீவியின் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்து நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நான் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தற்போது ரெஸ்ட் எடுத்து வருகிறேன். ரசம் மட்டுமே அதிகமாக சாப்பிடுகிறேன். விரைவில் குணமடைந்து விடுவேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை ஸ்ருதிஹாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் நடிகை ஸ்ருதிஹாசன் பிசிஓ என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.