கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் இடது புறம் பல்லவர் கால விநாயகர் புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிற்பம் 4 அடி உயரமும், 3 அடி அகலமும் உடையது. இது கி.பி 9-ஆம் நூற்றாண்டின் பிற்காலப் பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்லவர்கள் பெரும்பாலும் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்களை செதுக்கியுள்ளனர். இந்த சிலை இருந்த இடத்திற்கு அருகிலேயே மேற்பரப்பில் கழிவுநீர் கால்வாயும், ஆங்காங்கே ஒரு சில கற் தூண்களும் இருப்பதால் ஏற்கனவே அங்கு கோவில் இருந்திருக்கலாம். காலப்போக்கில் அந்த கோவில் சிதலமடைந்திருக்கலாம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.