தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் விவரங்களை டிசம்பர் மாதத்திற்குள் முடித்து பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக வங்கிகளில் அல்லது தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகளில் ஆபத்தான முறையில் மற்றும் பயன்பாடு இல்லாத முறையில் பல்வேறு கட்டிடங்கள் இருக்கக்கூடும்.

எனவே ஆபத்தான முறையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆபத்தான கட்டிடங்களில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது எனவும் உடனடியாக அந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆபத்தான கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பிறகு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று கூறப்படுகிறது.