உத்திரபிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 28ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் கீழே விழுந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து முதியவருக்கு உதவினர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.