
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதன்படி வேலை குறைப்பு கொள்முதல் பூர்த்தி செய்தல் வாடிக்கையாளர் உறவு மற்றும் சார்ஜி உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் பாதிக்கப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2023 தனது பங்குகளை விற்பனை செய்தது. அதன் பின்னர் பல சவால்களை எதிர்கொண்டது.
கடந்த 2023 டிசம்பரில் இருந்து ஓலா நிறுவனத்தின் இழப்புகள் 50% அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா எலக்ட்ரிகின் பங்கு அதன் உச்சத்தில் இருந்து 60% க்கும் அதிகமாக சரிந்துள்ளது. வாடிக்கையாளர்களின் புகார்கள் சமூக ஊடக புகார்கள் மற்றும் போட்டி நிறுவனங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் கடந்த நவம்பர் 2023இல் ஓலா சுமார் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் கடந்த மார்ச் 2024 நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக்கின் நிறுவனத்தில் 4000 பணியாளர்கள் கால் பங்குக்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒப்பந்த பணியாளர்கள் நிறுவனத்தின் பொது வெளியீடுகளில் சேர்க்கப்படாததால் சரியான பணி நீக்க தகவல் தெரியவில்லை. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்துதல், செலவுகளை குறைத்தல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும் என ஓலா நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.