
பீகார் மாநிலம் முசாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் சையத் அலி என்ற மாணவன் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் இருந்து 500 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின் இருப்பு விபரத்தை சரிபார்த்தபோது, அதில் 87.65 கோடி ரூபாய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தான் தவறுதலாக பார்த்து இருக்கலாம் என்று எண்ணி மீண்டும் சரிபார்த்துள்ளார். அப்போதும் அவரது வங்கி கணக்கில் 87.65 கோடி ரூபாய் இருந்துள்ளது.
இதனால் வீட்டுக்கு ஓடிச் சென்ற அந்தச் சிறுவன், தனது தாயிடம் கூறியுள்ளார். உடனடியாக அந்த சிறுவனின் தாயார் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் தவறுதலாக 87 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட தொகையை மீண்டும் திரும்ப பெற்றனர். அதன் பின் அந்த சிறுவனின் வங்கி கணக்கில் வெறும் 532 மட்டுமே இருந்தது. இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.