உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில், முகமது இம்ரான் மற்றும் லுப்னா என்ற தம்பதியினரின் திருமணம், வரதட்சணைக் கொடுமை (Dowry Harassment) காரணமாக திருமணம் ஆன 24 மணி நேரத்திலேயே முறிந்துள்ளது.

திருமணத்திற்கு அடுத்த நாள் புகுந்த வீட்டிற்குச் சென்ற லுப்னாவை, கணவர் வீட்டார் ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக் வாங்கிக் கொடுக்க வேண்டும் அல்லது ₹2 லட்சம் ரொக்கம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுச் சித்ரவதை செய்துள்ளனர்.

லுப்னா தனது பெற்றோரிடம் பணம் கேட்டுப் பெற மறுத்ததால், இம்ரானின் குடும்பத்தினர் அவரை தாக்கி, வீட்டு வாசலில் துரத்தி அடித்து வெளியேற்றியுள்ளனர்.

மேலும், லுப்னா அணிந்திருந்த நகைகள் மற்றும் அவரது வீட்டார் கொடுத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

லுப்னாவின் தாயார், திருமணம் குறித்துப் பேசும் போது வரதட்சணையாகப் பைக் எதுவும் கேட்கவில்லை என்றும், தாங்கள் லட்சக்கணக்கில் செலவழித்த திருமணப் பொருட்களையும் திருப்பித் தருமாறும், நீதி வழங்கக் கோரியும் கேட்டுக் கொண்டுள்ளார். இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.