நவி மும்பை நகரத்தில் உள்ள சீவுட்ஸ் நெக்சஸ் மாலில் செயல்படும் 7-Eleven கடையில் எலிகள் கட்டுசுதந்திரமாக சுத்தி, ஐஸ்கிரீம் பவுல்களுக்குள் ஏறி நேராக உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியுள்ளது. இந்த வீடியோ ஒரு வாடிக்கையாளர் எடுத்தது எனக் கூறப்படுகிறது.
இவர் இந்த வீடியோவை சமூகதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காட்சிகள் பார்ப்பவர்களின் மனதை கலங்கவைக்கும் வகையில் இருந்ததால், பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Just saw a bunch of rats eating at 7/11 store in seawoods
byu/Parking-Version9167 innavimumbai
வீடியோவில், கடையின் டேக்கேஅவே ஜன்னலருகே வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம் பவுல்களில் எலிகள் நுழைந்து உண்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த ஊழியரும் அருகில் இல்லை என்பதும் சுகாதார மேலாண்மை பற்றிய பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு சர்வதேச பிராண்டான 7-Eleven கடையில் இவ்வாறான சீர்கேடு ஏற்பட்டிருப்பது மக்கள் நம்பிக்கையை பெரிதும் பாதித்துள்ளது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது எத்தனை ஆபத்தான சூழல் என்பதை நிரூபிக்கிறது. உணவகங்களில் இவ்வளவு அலட்சியமா?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். “ஒரே இடத்தில் எலிகளும், ஐஸ்கிரீமும் இருக்கிறது என்பதிலேயே பொதுமக்கள் உணவுப் பாதுகாப்பு மீது நம்பிக்கை இழக்க நேரிடும்,” எனவும் சிலர் பதிவிட்டுள்ளனர். பலரும், சீவுட்ஸ் பகுதியில் உள்ள அந்த 7-Eleven கடையை புறக்கணிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நகர சுகாதாரத்துறையை தூண்டுகிறது. உணவகங்கள் சுத்தம், பாதுகாப்பு ஆகியவற்றை கடைபிடிக்காமல் இருந்தால், பொதுமக்களின் உயிரே ஆபத்தில் இருக்கலாம். தற்போது இந்த கடையின் சுகாதார நிலை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த வீடியோ, மக்கள் உணவகங்களை தேர்ந்தெடுக்கும் போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான கடும் எச்சரிக்கையாக உள்ளது.
