ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பலியாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான ஹரிஷ். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தொழில் ரீதியாக குரு கிராமில் வசித்து வந்துள்ளார்.

அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பலியாவாஸ் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். குரு கிராமில் வசித்து வந்த ஹரிஷுக்கு அதே பகுதியை சேர்ந்த யஷ்மத் கவுர் (27) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் ஹரிஷ் யஷ்மத்தை குருகுராமில் உள்ள ஒரு வீட்டில் வாடகை எடுத்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இருப்பினும் அடிக்கடி தனது மனைவியிடமும், மகள்களிடமும் செல்போனில் பேசி வந்துள்ளார். இது குறித்து அறிந்த கள்ளக்காதலியான யஷ்மத், ஹரிஷ் உடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இரவு ஹரிஷ் வழக்கம் போல தனது மனைவி குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி உள்ளார்.

அதனைக் கண்ட யஷ்மத் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் இறுதியில் கோபத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ஹரிஷை  சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார் இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹரிஷின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் யஷ்மத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் உயிரிழந்த ஹரிசின் நண்பர் விஜய் இடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.