இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வீட்டின் மொட்டை மாடியில் வாலிபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அவர் தம்புல்ஸை கீழே வைத்து அதனை பிடித்துக் கொண்டு தனது கால்களை மேலே தூக்கி உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது தனது செல்போனை அங்குள்ள சுவற்றில் வைத்து வீடியோவாக பதிவு செய்தார்.

இதையடுத்து அங்கு வந்த குரங்கு ஒன்று அந்த செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.