கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், பள்ளிக்கரா பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை சுவிங்கம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறிய சம்பவம் நெஞ்சை உருக்கியது. சைக்கிளில் சென்று கொண்டிருந்த அந்த சிறுமி, சுவிங்கம் வாயில் போட்ட சிறிது நேரத்தில் திணற ஆரம்பித்தார்.

உடனடியாக தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி, சாலையின் எதிர்ப்புறம் காய்கறி வாங்க நின்ற இளைஞர்கள் குழுவை நோக்கி சென்றார். அவசரத்தை உணர்ந்த ஒரு இளைஞர் உடனடியாக முதலுதவி அளித்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றினார்.

 

View this post on Instagram

 

A post shared by India Today (@indiatoday)

வைரலான சிசிடிவி காட்சிகளில், சிறுமி மூச்சுத் திணறலுடன் இளைஞர்களை நோக்கி செல்வது தெளிவாகத் தெரிகிறது. ஒரு இளைஞர் சிறுமியைத் தூக்கி, தனது கையில் படுக்க வைத்து, முதுகில் அழுத்தம் கொடுத்து சுவிங்கத்தை வெளியேற்றினார்,

மற்றொருவர் அவருக்கு உதவினார். இதனால் சிறுமி மீண்டும் சாதாரணமாக சுவாசிக்கத் தொடங்கினார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவ, கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, “கண்ணூர் பள்ளிக்கராவில் இளைஞர்கள் சிறுமியின் உயிரைக் காப்பாற்றினர்,” என பேஸ்புக்கில் பாராட்டினார். சிறுமியின் புத்திசாலித்தனமும், இளைஞர்களின் விரைவான செயல்பாடும் உள்ளூர் மக்களால் பெரிதும் புகழப்பட்டு வருகிறது.