
ஆன்லைன் மக்கள் இடையே ஐஸ் ஹவுஸ் பீட் என்று அறியப்படும் டாரன் ஜேசன் வாட்கின்ஸ் ஜூனியர். இவர் ஒரு பிரபல அமெரிக்க யூடூபர் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமர். இவர் சமீபத்தில் WWE ராயல் ரம்பில் 2025 என்ற போட்டியில் பங்கேற்றார். ஏற்கனவே விளையாடிய போட்டியாளர் அகிரா டோசாவா என்ற வீரருக்கு காயம் ஏற்பட்டதால் விளையாட முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக பிரபல யூடூபர் ஜேசன் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார்.
களத்தில் இறங்கிய ஜேசன், ஓடிஸ் வெளியேற பிரவுன் பிரேக்கருக்கு உதவி செய்தார்.ஓடிஸ் வெளியேறிய பின் பிரேக்கர் தனது பிரபல ஷாட்டான ஸ்பியர் ஷாட்டை பயன்படுத்தி ஜேசனை சில நிமிடங்களில் அந்தரத்தில் தூக்கி பந்தாடியுள்ளார். இதில் காயமடைந்த ஜேசன் எழுந்து நிற்க கூட முடியாமல் படுகாயம் அடைந்துள்ளார். இனி WWE விளையாட்டில் தனது வாழ்நாள் முழுக்க தலை வைத்து கூட படுக்க மாட்டேன் என ஜேசன் தெரிவித்துள்ளார்.
no more WWE💔 pic.twitter.com/iOb9xDGKGs
— Speed⭐️ (@ishowspeedsui) February 2, 2025