இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு அவ்வப்போது இலவச உணவு வழங்குகிறது. இது பற்றி நிறைய பயணிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதாவது ரயிலுக்காக நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தால் அவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். குறைந்தபட்சம் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்கும் பயணிகளுக்கு ரயில்வே சார்பில் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த வசதியை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் பயணிகள் மட்டும்தான் பெற முடியும். *

இந்த இலவச உணவு சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ ஆகிய ரயில்களில் செல்பவர்களுக்கு கிடைக்கும். இதேபோன்று ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஏதேனும் காரணத்திற்காக ரயிலை தவற விட்டால் அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதற்கு ரயில்வே நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் TDR படிவத்தை பூர்த்தி செய்து டிக்கெட் கவுண்டரில் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உரிய பணம் கிடைக்கும். மேலும் ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் அவ்வப்போது ஐஆர்சிடிசி விதிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.