
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக குட் பேட் அக்லி படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், கார் ரேசிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது படங்களில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக துபாய் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். நடிகர் அஜித் சொந்தமாக கார் ரேஸ் வைத்துள்ளார். துபாயில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் அவருடைய அணியானது மூன்றாவது இடம் பிடித்தது. இந்த நிலையில் இத்தாலியில் நடைபெற்ற பன்னிரண்டாவது MUGELLO கார் பந்தயத்தின் GT 992 பிரிவில் மூன்றாம் இடம் பிரித்து அஜித்குமார் ரேசிங் அணி அசத்தியுள்ளது.