திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசுவாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த ஊரில் வசிக்கும் சிலர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான மருந்து வாசனை வந்தது. இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதாரத் துறையினர் குடிநீரை பரிசோதனை செய்தனர். கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என தெரிகிறது. ஆனாலும் பூச்சி மருந்துகள் யாராவது கலந்தார்களா? அல்லது கிருமி நாசினி பவுடர் அதிகம் கலந்ததால் வாசனை வந்ததா? என்ற கோணத்தில் சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.