திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முகா ஆனந்துக்கு புகார்கள் வந்தது. அதன்படி போக்குவரத்து துறை அதிகாரிகள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு தீவிர சோதனை ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் இருந்து 12 ஏர் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ஏர் ஹாரன்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.