மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரத்தில் இருக்கும் மின்சார துறையில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவனியாபுரம் சி.எஸ்.ஐ நகரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க விண்ணப்பித்துள்ளார். அப்போது பழனி முருகன் முனியாண்டியிடம் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து முனியாண்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி முனியாண்டி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பழனி முருகனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பழனி முருகனை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.