புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புசெல்வி(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் அன்புச்செல்வி தூக்கிட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அன்புச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் அன்புச்செல்வி தூக்கிட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அன்புச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.