உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் whatsapp செயலியில் அடிக்கடி மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியை போட்டு மியூசிக் இருக்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மெட்டா அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரீஸ் வைக்கும் போது அதற்கு லைக்ஸ் களை குவிக்கலாம். இதேபோன்று whatsapp-லும்  ஸ்டேட்டஸ்  வைக்கும் போது அதற்கு லைக்ஸ்களை குவிக்கும் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய அப்டேட் பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.