தமிழகத்தின் நியாய விலை கடைகளில் அடிக்கடி ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் இதற்காக அரசு பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை சமூக விரோத செயலாக சிலர் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதும் அரசுக்கு புகார் எழுந்துள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் இந்த குற்றங்கள் இன்னும் தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரேஷன் பொருட்களைக் கடத்தல் அல்லது பதுக்கல் செய்யும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது இன்றியமையா பண்டகங்கள் சட்டம் 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைக்களின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அரசுக்கு 18005995950என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.