ஐரோப்பியாவில் உள்ள டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் டென்மார்க் நாட்டின் அரசாங்கம் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 70 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 81 பேர் ஆதரவு தெரிவித்தனர். 21 பேர் அந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஆதரவு எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தினால், ஓய்வூதிய வயது அதிகரிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகளிலேயே டென்மார்க் அதிக ஓய்வு பெறும் வயதுடைய நாடாக திகழ்கிறது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வரும் நிலையில் ஆதரவும் வருகிறது. மேலும் டென்மார்க்கில் இதுவரை ஓய்வு பெறும் வயது 67 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.