மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள நிலையில் தற்போது மதுரையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்.

மேலும் அவர் 2019 2021 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில் NTA கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என அமித்ஷா பேசினார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியதாவது, அவர் பேசியது எதுவுமே கடந்த காலங்களில் நடக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்ற திமுக கூட்டணி 2026 மட்டுமல்ல அதன் பிறகு வரும் தேர்தலிலும் தொடர் வெற்றியைப் பெறும் என்று கூறினார்.