
சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அம்பில் மகேஷ் கலந்து கொண்டார். அங்கு அவர் தொழில்நுட்பம் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதைப்பற்றி நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் புரிதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் எல்லையை தாண்டி தாக்குவது, பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டும் பயங்கரவாதம் இல்லை. தொழில்நுட்பம் மூலம் ஒரு தனி நபரை அச்சுறுத்துவதும் பயங்கரவாதம் தான். சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தங்கள் திறமையை அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்று அவர் கூறினார்.