சினிமா உலகில் கிறிஸ்டோபர் நோலன் கால் பதித்த நாள் முதல் இன்று வரை ஒரு சிறு பார்வை 

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான கிரிஸ்டோபர் நோலன். சுமார் 12 படங்களை இவர் இயக்கியுள்ளார். நேற்றைய தினம் வெளியான ஓபன் ஹெய்மர்  திரைப்படம் உட்பட அவர் இயக்கிய 12 திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். இந்தியாவில் டார்க் நைட் திரைப்படத்திற்கு பின்பு இந்தியர்களுக்கு பரீட்சையமானார்.

சொல்லப்போனால் பல அறிமுக இயக்குனர்கள் கிறிஸ்டோபர் நோலன் படத்தை இன்ஸ்பயர் செய்து தங்களது படங்களை இயக்கியுள்ளனர். இப்படி உலகம் முழுவதும் பல இயக்குனர்களுக்கு, சினிமா கலைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழும் கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த தருணம் மிகக் கடினமாக தான் இருந்தது.

தனது முதல் படத்திற்கு யாரும் உதவாததால் தனது மனைவி மற்றும் நண்பர்களின் உதவியுடன் சுமார் 6000 டாலர் மதிப்பில் பாலோவர்ஸ் என்னும் தனது உடல் முதல் படத்தை இயக்கினார். 1998 இல் அப்போதைய டாலர் மதிப்பு இந்திய மதிப்பில் ரூபாய் மூன்று லட்சம் இருக்கும். இவ்வளவு குறைந்த அளவிலான பணத்தைக் கொண்டும் ஏற்கனவே வேலைக்குச் செல்லும் தனது நண்பர்களை கொண்டும்  மிகக் கச்சிதமாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் சரியாக திட்டமிட்டு நேர்த்தியான தனது படப்பிடிப்பு கலையால் அருமையான படைப்பாக அதை உருவாக்கி வெளியிட்டார்.

அதில் அவருக்கு லாபமாக ரூபாய் 35 லட்சம் கிடைத்தது. இதை தொடர்ந்து மொமெண்ட்டோ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு என்பது அவருக்கு கிடைத்தது. அதற்கு பின்பு சொல்லவா வேண்டும், நோலன் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட்டு தான். அன்றைக்கு பிற நிறுவனங்களின் முதலீட்டை எதிர்பார்க்காமல், தனது சொந்த திறமையை நம்பி மனைவி மற்றும் நண்பர்களின் உதவியுடன் ரூபாய் மூன்று லட்சத்தில் தனது திரை பயணத்தை தொடங்கியவர், இன்றைக்கு ரூபாய் 3500 கோடிக்கு மேலான சொத்துக்கு அதிபதியாக திகழ்கிறார்.