நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு பகுதி மக்களின் இதயத்தை பற்றியும் – எண்ணங்களை பற்றியும் அவர்கள் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய அமைச்சரவிலிருந்து மந்திரிகள் 400 முறை மாவட்ட அளவில் சென்று அங்கே வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய சாதனை. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே….

வடகிழக்கு இந்திய மக்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் அல்ல. ஆனால் காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள். ஏனென்றால் அவர்களுடைய அரசியல் அப்படிப்பட்டது. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே…  இந்திய திருநாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படை மணிப்பூர். அதன் வளர்ச்சியின் அடிப்படை மணிப்பூர். சுதந்திரப் போராட்டம், ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் போன்றவைகள் எல்லாம் மணிப்பூரில் இருந்து தான் வந்தது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நிலப்பகுதி பிரிவினைவாதத்தில் பலியாகப்பட்டது. ஏன் இவ்வாறு செய்யப்பட்டது தலைவர் அவர்களே ? நான் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு செயலும் மணிப்பூரில் தீவிரவாதிகளின் கருணையினாலே நடந்தது. இதற்குக் காரணம் காங்கிரஸ்.

அரசு அலுவலகங்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மாட்டுவதற்கு அனுமதி இல்லை. நேதாஜி அவர்களின் திருஉருவ சிலை மீது குண்டு போடப்பட்ட போது சர்க்கார் யாருடையதாக இருந்தது என்றால் ? காங்கிரஸ் உடையதாக தான் இருந்தது. மணிப்பூரில் பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படாமல் இருந்தது. அப்போது ஆட்சி யாருடையதாக இருந்தது ? காங்கிரஸ் உடையது. அங்கே ஒரு இயக்கம் நடந்தது.

நூலகங்களில் உள்ள புத்தகங்களை எரிக்கும் அந்த இயக்கம் நடந்த போது சர்க்கார் யாருடையதாக இருந்தது ? மணிப்பூரில் உள்ள ஆலயங்களில் பூஜை நடக்காமல் மூடப்பட்டிருந்தது. மணிப்பூரில் உள்ள கோவில்களில் குண்டு வீசப்பட்டு மக்கள் இறந்தார்கள்.

அப்போதைய ஆட்சி காங்கிரசின் ஆட்சியாக இருந்தது. ஐஏஎஸ்,  ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அங்கே வேலை செய்ய வேண்டும் என்றால் ?  அவர்களது சம்பளத்தில் ஒரு பகுதியை தீவிரவாதிகளுக்கு கட்ட வேண்டும். அப்போது அங்கே காங்கிரசின் ஆட்சி நடந்தது. இவர்களுடைய துன்பம், வேதனை எல்லாம் தேவையான இடத்தில் மட்டும் தான் வரும்.

எல்லாம் அரசியலில் தொடங்கும், அரசியலில் முன்வரும், இவர்கள் மனிதாபிமானம் பற்றி யோசிக்க தெரியாதவர்கள். தேசத்தைப் பற்றி யோசிக்க தெரியாதவர்கள். தேசத்தின் துன்பங்கள் பற்றி யோசிக்க தெரியாதவர்கள். இவர்களுக்கு அரசியல் மட்டும் தான் தெரியும்.

மரியாதைக்குரிய தலைவர் அவர்களே… மணிப்பூரில் உள்ள அரசு கடந்த ஆறு வருடங்களாக இந்த பிரச்சனைகளுக்கு…  ஆறு ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மணிப்பூரில் பல மாதங்களாக நடக்கின்ற பந்த் எல்லாம் இப்போது இல்லை. அதெல்லாம் கடந்த காலமாகிவிட்டது. அமைதிக்காக எல்லோரையும் நம்மோடு இணைத்துக் கொண்டு செல்வதற்காக அங்கே அந்த முயற்சிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் அரசியலை இதிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்கிறோமோ,  அவ்வளவு சீக்கிரம் அமைதி திரும்ப வரும் என்று நான் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன். எங்களை பொறுத்தவரையில் வடகிழக்கு ஆசிய நாடுகள் எப்படி வளர்ச்சி அடைகிறதோ அதேபோல நம்முடைய கிழக்கு பகுதியின் வளர்ச்சியோடு, வடகிழக்கு பகுதியும் வளர்ச்சியின் மையமாக இருக்கும் என தெரிவித்தார்.