டுவிட்டர் நிறுவனத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டுவிட்டரில் ஒரு பயனாளர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2400 டுவிட் மட்டுமே செய்ய இயலும். இந்த நிலையில் இன்று டுவிட்டர் தளம் உலக அளவில் முடங்கியுள்ளது. கணினி மூலமும் செல்போன் மூலமும் டுவிட் செய்யும்போது வெவ்வேறு காரணங்களை வெளிப்படுத்தி டுவிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது கணினி மூலம் டுவிட் செய்யும்போது தினசரி வரம்பை தாண்டி விட்டீர்கள் என்றும் செல்போன் மூலம் டுவிட் செய்யும்போது உங்கள் டுவிட்டை அனுப்ப முடியவில்லை என்றும் வந்துள்ளது. இதனால் டுவிட்டர் பயனாளர்கள் எந்த டுவிட்டையும் அனுப்ப முடியாமல் திணறி வருகின்றனர். இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இந்த நிலைமை தற்போது ஓரளவு சீரடைந்து விட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.