
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 9-ம் தேதி கருத்தவங்க அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பலாத்கார தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்க வழி உள்ளது. இதுகுறித்து மம்தா பானர்ஜி பேசினார். அவர் கூறியதாவது, புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சிக்கிறோம்.
மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்கள் மூலம் நீதியை பெறுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களின் புகார்களை விசாரித்து விரைவில் கடும் தண்டனை வழங்க மசோதா உதவியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த புதிய மசோதா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்ற ஷரத்து இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரிழக்கும் போது இந்த உச்சபச்ச தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.