சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை வருகின்ற 2024ஆம் ஆண்டிற்குள் கொரோனா பெருந்தொற்றிற்கு முந்தைய வளர்ச்சி நிலையை அடையும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா வளர்ச்சித் துறையின் வளர்ச்சியும் பெருமளவு தேக்கமடைந்துள்ளது. அவற்றிலிருந்து நாடுகள் இயல்பு வளர்ச்சிக்கு திரும்ப முயன்று கொண்டிருக்கின்றது. இதில் சிங்கப்பூரும் உண்டு. எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டில் அந்நாட்டு சுற்றுலா துறையில் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டில் 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை சுற்றுலா வாசிகள் வருகை இருக்கும் என அந்நாட்டு சுற்றுலா வளர்ச்சி துறை கணிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றி கடந்த வாரம் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலில் மொத்தம் 63 லட்சம் பேர் சிங்கப்பூருக்கு கடந்த ஆண்டு வருகை புரிந்துள்ளது என தெரிவித்துள்ளது. இவற்றில் முதலிடத்தில் 11 லட்சம் என்ற எண்ணிக்கையில் இந்தோனேசியா முதல் இடத்திலும் 6.86 லட்சம் என்ற எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்திலும் 5.93 லட்சம் என்ற எண்ணிக்கையில் மலேசியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனால் சிங்கப்பூர் கொரோனா பெருந்தொற்றிற்கு முந்தைய வளர்ச்சி நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.