
சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் மருத்துவர் நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, அரசியலில் சிலர் என்னை பகடைக்காயாக பயன்படுத்த முயற்சித்து வருகிறார்கள்.
என்னை விலை பேச இந்த மண்ணில் எந்த கொம்பனும் இதுவரை பிறக்கவில்லை. தமிழக அரசை கவிழ்ப்பதற்கு தொடர்ச்சியாக சதி நடந்து வருகிறது. நாம் அரசுக்கு கோரிக்கை வைக்க கூடியவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. கோட்பாடுகளை பாதுகாக்கவும் வேண்டும். மேலும் பெரியாரை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த மண்ணில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.