பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனால் அவர் கட்சி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அன்புமணி ராமதாஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, இனிமேல் வருவார், வந்து கலந்து கொள்ளுவார் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரிடம், உங்கள் இருவருக்கும் இடையேயான மனக்கசப்புகள்  நீங்கி விட்டதா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, அவருடன் எனக்கு எந்த மனக்கசமும் கிடையாது. நான் எப்போதும் உங்களுக்கு இனிப்பான செய்திகளை தான் கூறுவேன் என்று கூறினார்.