ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்து சீனா வருத்தம் தெரிவித்துள்ளது.

“இருநாட்டினரும் அமைதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சர்வதேச சட்டத்தை கடைபிடித்து பொறுமை, நிதானம், மற்றும் அமைதியுடன் செயல்பட வேண்டும். நாங்கள் பயங்கரவாதத்தினை எதிர்க்கிறோம். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்” என்று சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின்ஜியான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே டி வான்ஸ், “இதற்கு முன் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால் தற்போது இந்த தாக்குதல் போராக மாற வேண்டாம். பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.