திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தற்போது நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாகவும் கட் அவுட் மற்றும் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதன் பிறகு இதனை மீறும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். அதாவது பொதுக்கூட்டம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் அனுமதி பெற்று வைக்கலாம். இதனை மீறி அதிகமாக பேனர் வைப்பது தவறு.

அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் எழுந்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் போன்றவைகளை அனுமதியின்றி வைக்கக்கூடாது. மேலும் இந்த அறிவுரையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.