பிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த் தமிழில் என் சகியே, முத்திரை, கம்பீரம் ஆகிய திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இவர் கடந்த வருடம் அதில் துரானி என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். சில தினங்களுக்கு முன்பு அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அதோடு கணவர் மீது மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்தில் புகாரளித்து இருந்தார் ராக்கி சாவந்த்.

அதாவது, அதில் துரானி தன்னை அடித்தார். மேலும் தனது முகத்தில் திராவகம் வீசிவிடுவேன், சாலை விபத்து வாயிலாக கொன்றுவிடுவேன் என கணவர் மிரட்டியதாகவும், தொழுகை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். பின் ராக்கி சாவந்த் அளித்த புகாரின்படி அதில் துரானியை  காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். இந்நிலையில் தன்னை நிர்வாணமாக புகைப்படம் பிடித்து தனது 2-வது கணவர் அதனை பணத்திற்காக விற்றுவிட்டதாக ராக்கி சாவந்த் பகீர் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.