சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் ஆவது சேர்ந்து பண்ண வேண்டும் என்ற ஆசை இயக்குனர்களுக்கு நிச்சயமாக இருக்கும். ரஜினியுடன் சேர்ந்து பட வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் அனைவரிடமும் இருக்கும். இந்த நிலையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் ரஜினிக்கு பிரபலம் ஒருவர் நோ சொல்லிவிட்டாராம்.

அவர் பேரு யாரும் இல்லை கதை ஆசிரியர் அன்னக்கிளி கே.செல்வராஜ். இவர் பெண்களை உயர்வாக வைத்து கதை எழுதுவதற்கு பெயர் போனவர். அன்னக்கிளி கே.செல்வராஜ் கதை எழுதினால் நன்றாக இருக்கும் என ரஜினி நினைத்து தனக்கு ஒரு கதை எழுதுங்களேன் எனக் கேட்டு இருந்தாராம். ரஜினிக்கு அவர் நெருக்கமானவர் என்பதால் கதை எழுதச் சொல்லி கேட்டிருக்கின்றார்.

ஆனால் அவர் உன் திரைப்படத்தில் நீ ஒரு அடி அடித்தால் 40 பேர் கீழே விழுவார்கள். என்னால் அது போன்ற கதை எழுத முடியாது. உனக்கு கதை எழுத முடியாது என தெரிவித்திருக்கின்றார். என்னுடைய ட்ராக் வேற உன்னுடைய ட்ராக் வேற என கூறி மறுத்துவிட்டாராம். இதனை ரஜினியும் புரிந்து கொண்டாராம். ரஜினிக்கு கதை எழுத மறுத்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.