
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் தயாரிப்பாளர் விஏ துரையின் மருத்துவ செலவுக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.
போனில் அவரை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்த ரஜினி, அதன் பிறகு இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். இதேபோன்று நடிகர் சூர்யா, கருணாஸ் போன்றோரும் அவருக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். என்னம்மா கண்ணு, பிதாமகன் உள்ளிட்ட பல படங்களை விஏ துரை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.